3 லட்சத்திருக்கும் அதிகமான மக்கள் கூடிய மாபெரும் மாநாடு வலையர் வாழ்வுரிமை மாநாடு
3 லட்சத்திருக்கும் அதிகமான மக்கள் கூடிய மாபெரும் மாநாடு
தமிழ்நாட்டிலேயே மக்கள் கூடிய மாபெரும் மாநாடு இந்த வலையர் வாழ்வுரிமை மாநாடு.
முத்தரையர் வரலாற்றில் பதிய வேண்டிய நாள் 31-1-2021.இந்த மாநாடு நடைபெற்ற நாள். தமிழக வரலாற்றில் சரித்திரம் படைத்தது நமது மாநாடு. நாம் அனைவரும் இந்த பெருமையை பெற்றுத்தந்த வீர முன்னேற்ற சங்க தலைவர் அண்ணன் K.K. செல்வகுமார் அவர்களுக்கு முத்தரையர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வோம்.
தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது எந்த ஒரு தனிப்பட்ட சமுதாயத்திருக்கோ இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் கூடியதில்லை.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் முத்தரையர்கள் தங்களை வலையர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த சூழலில்தான், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வக்குமார், 'வலையர் வாழ்வுரிமை மாநாடு'' என்கிற பெயரில் 31-1-2021 இன்று மதுரை ஒத்தக்கடையில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள், தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் இட்டாலா ராஜேந்தர் முதிராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பண்டா பிரகாஷ் முதிராஜ், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இது தமிழகத்தில் நடந்த மாநாடுகளிலேயே அதிகப்படியான முத்தரையர் மக்கள் கலந்துகொண்ட மாநாடு என்ற பெருமையை தன்வசப்படுத்தி கொண்டதில் வீர முன்னேற்ற சங்கத்தின் தலைவர் k.k.செல்வகுமார் அவர்களையே சேரும்.அதிமுக கட்சியில் முதல்வர் M.G.R அடுத்து சாதி சங்க மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் யாரும் நினைத்துக்கூடபார்க்கமுடியாத விசயங்கள் இரண்டு நடைப்பெற்றது...
அதில் ஒன்றுதான் அழகர்கோவில் பொய்கரைப்பட்டி பொய்கையில் நம் மன்னர் திருவுருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் பிஜேபி-யின் சொந்த செலவில் கட்டித்தரப்படும்... அதற்கான மாடல் மற்றும் இடத்திற்கான பட்டா இரண்டையும் மாநாட்டிலே கையில் கொடுத்துவிட்டார் எல் முருகன்...
இரண்டாவது மதுரை ஆணையூர் மற்றும் வலையன்குலத்தில் நம் மன்னர் திருவுருவசிலை நிறுவப்படும். 50 ஆண்டுகால வலையர்களின் கோரிக்கையான வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும். முதல்வர் எடப்பாடி அறிவிப்பு...
![]() |
![]() |
![]() |
No comments:
Post a Comment